×

விசா முடிந்து நாடு திரும்ப முடியாமல் தவித்த ரஷ்ய நாட்டு வாலிபருக்கு மெரினா போலீசார் உதவி

சென்னை: சென்னை மெரினா காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு வெளிநாட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிகிடா (30) என்றும், இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்ததும் தெரிந்தது. தற்போது விசாவின் காலாவதி ஆனதால் உதவி கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தது தெரிய வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ரஷ்ய வாலிபருக்கு உதவும் வகையில், உதவி ஆய்வாளர் தினேஷ்குமாரை நியமித்து ரஷ்ய தூதரகத்திற்கு சென்று விசா பெற்று தரும்படி உத்தரவிட்டார். அதன்படி உதவி ஆய்வாளர் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் கூறியபடி ரஷ்ய வாலிபர் நிகிடாவை அழைத்து சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இமிகிரேஷன் அலுவலகத்திற்கு அழைத்து ெசன்று விசா ஏற்பாடு செய்தார். பிறகு சொந்த நாடான ரஷ்யா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்து நேற்று இரவு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். மெரினா காவலர்களின் செயலை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

Tags : teenager ,Russian ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...