பெண் டாக்டருக்கு மவுன அஞ்சலி

தாம்பரம்: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஷாத் நகரை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி (26). கால்நடை மருத்துவர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரியங்கா ரெட்டி மாயமானார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அவர், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் சிட்லப்பாக்கம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிட்லப்பாக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை பராமரிப்பு துறை  உதவி இயக்குநர்கள் மணிமாறன், சந்திரன் மற்றும் மருத்துவர்கள் சுதாகர், ஷீலா, லலிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : doctor ,
× RELATED இடைப்பாடியில் அஞ்சலி நிகழ்ச்சி