தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் இன்ஜின் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு

சென்னை, டிச. 5 : ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை 5 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.இதை கவனித்த ரயில் டிரைவர், ரயிலை இயக்காமல் பாதியிலே நிறுத்தினர். பின்னர், ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இன்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணியளவில் கோளாறு சரி செய்யப்பட்டதால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதன் காரணமாக அந்த தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Related Stories:

>