சுசீந்திரம் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

சுசீந்திரம், டிச.5:  சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு 2வது தெருவில் வசித்து வருபவர் மணி(66). இவர் 15 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் வீடு சென்னையில் உள்ளது. அவரை பார்க்க மணி கடந்த மாதம் சென்னை சென்றார்.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மணியின் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடக்கிறது என கூறியுள்ளார். இதையடுத்து மணி சென்னையில் இருந்து ஊர் திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்தபோது பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம், 3 கிராம் தங்க நகை, ஐம்பொன் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து மணி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Jewel ,theft ,bureau ,Susindram ,
× RELATED ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு