×

10 நாள் நடந்த திருவிழா நிறைவு கோட்டார் சவேரியார் பேராலயத்தில் 8ம்தேதி திருக்கொடியிறக்க நிகழ்வு

நாகர்கோவில், டிச.5 : கோட்டார் சவேரியார் பேராலயத்தில் திருக்கொடியிறக்க நிகழ்வு வரும் 8ம்தேதி நடக்கிறது. கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி 8ம் திருவிழாவான 1ம்தேதி இரவு தொடங்கியது. 2ம் தேதி 9ம் திருவிழா அன்று இரவும் தேர் பவனி நடந்தது. தேர்பவனியின்போது தேரில் பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட்டனர். வேண்டுதல்கள் நிறைவேற குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தபடி தேருக்கு பின்னால்வந்தனர் நேற்று முன்தினம் (3ம்தேதி) 10ம் திருவிழா நடந்தது. அன்று காலையில் தேர்பவனி நடந்தது. அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், நள்ளிரவு வரை பக்தர்கள் வருகை இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாக செல்ல வேண்டிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பீச் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன் புதூர், செட்டிக்குளம், பாலமோர் ரோடு, கே.பி. ரோடு போன்றவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.எஸ்.பி. ஜவகர் தலைைமயில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேராலய திருக்கொடியிறக்க நிகழ்வு 8.12.19 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியார் திருப்பண்டப் பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல், நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.

Tags : festival ,Kotar Saveriyar Palace ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!