வனக்குற்றங்களை தடுக்க ஹெலிகாப்டர் வசதி

தர்மபுரி, டிச.4: வனப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறைக்கு ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற வன அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற வனஅலுவலர்கள் சங்கம் சார்பில், உலக ரேஞ்சர்கள் தின விழா, உலக ஊழல் ஒழிப்பு தினவிழா, ஓய்வூதியர் தினவிழா ஆகிய முப்பெரும்விழா, தர்மபுரியில் நேற்று நடந்தது. மாட்டத்தலைவர் ஓய்வுபெற்ற துணை வனப்பாதுகாவலர் மகிழன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் தகடூர் வனப்பிரியன் வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற வனஅலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சையத் சௌவுகத்அலி பாதுஷா, பழனிவேலு மற்றும் ஓய்வுபெற்ற உதவி வனப்பாதுகாவலர்கள் வெங்கடசாமி, ரமேல்ரெட்டி மற்றும் வேணுகோபால், முத்துகிருஷ்ணன், நித்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வனப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறைக்கு ஹெலிகாப்டர் வசதி வேண்டும். வனத்துறையில் ஓய்வு பெற்றவர்களின் குறைகளை, வனத்துறை உடனடியாக தீர்க்க வேண்டும். தற்போது பருவமழை பெய்து வருவதால், இந்த மழைநீர் வீணாகாமல் இருக்க, கசிவுநீர் குட்டை மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் விழாவில், 65 வயது முதிர்ந்த 40 சங்க உறுப்பினர்களை பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, மாட்ட செயலாளர் ஏகநாதன், பொருளாளர் நேரு, இணை செயலாளர் சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர். ஓய்வு பெற்ற வனச்சரகர் மாது நன்றி கூறினார்.

Tags : Helicopter facility ,forest fires ,
× RELATED கலிபோர்னியாவில் திடீரென பற்றிய...