×

வாகன தணிக்கையில் சிக்கினான் குண்டாஸ் முடிந்து வெளியே வந்த பலே திருடன் மீண்டும் கைவரிசை லால்குடி அருகே 4 வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க கோரிக்கைகளை வலியுறுத்தி பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.4: திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கடைநிலை ஊழியர்களின் பதவி உயர்வை பறிக்க கூடாது. போராடி பெற்ற 12 (3) ஒப்பந்தத்தினை மீறக்கூடாது. காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திறகு மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.லால்குடி, டிச.4: லால்குடி அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்சி-சிதம்பரம் 4 வழிச்சாலையால் கீழப்பெருங்காவூர்-மைக்கேல்பட்டி இடையே பள்ளிகள், கோயில்கள், மயானத்திற்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் விபத்துக்களை தடுக்க இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருச்சி-சிதம்பரம் இடையே 4 வழிச்சாலை பணிகள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட்-பனமங்கலம் பகுதியில் தொடங்கி வி.துறையூர், சிறுமருதூர், கீழப்பெருங்காவூர், நகர், திருமங்கலம், பூவார், வெள்ளனூர், புள்ளம்பாடி, கல்லக்குடி, கல்லகம் வழியாக சிதம்பரம் வரை புதிதாக 4 வழிச்சாலை பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. லால்குடி, மாந்துறை, முளப்பதுக்குடி, மைக்கேல்பட்டி, கீழப்பெருங்காவூர், மருதூர் வழியாக சமயபுரம் செல்லும் பக்தர்கள் கீழப்பெருங்காவூர்-மைக்கேல்பட்டி இடையே செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழப்பெருங்காவூர் ஊராட்சிக்குட்பட்ட மைக்கேல்பட்டி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மைக்கேல்பட்டி, முளப்பதுகுடி, கிராமத்திலிருந்து தங்களது ஊராட்சியான கீழப்பெருங்காவூர் கிராமத்தில் உள்ள அலுவலகம், பள்ளி, கோயில்கள் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.மேலும் கீழப்பெருங்காவூர் ஊராட்சிக்குட்பட்ட திருக்காவலூர், மளவனூர் மற்றும் மருதூர் ஊராட்சி பகுதியில் இருந்து லால்குடி செல்வதென்றால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். மேலும் இக்கிராமங்களில் இருந்து இறந்தவர்களை மைக்கேல்பட்டியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுமானால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை குறுக்கே கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது 4 வழிச்சாலை திட்டப்பணிகள் அதிகாரிகளால் கீழப்பெருங்காவூர்-மைக்கேல்பட்டி இடையே மேம்பாலம் அமைக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. மேம்பாலம் அமைக்கப்படாவிட்டால் 4 வழிச்சாலையில் கீழப்பெருங்காவூர்-மைக்கேல்பட்டி இடையே தொடர் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகும். எனவே இக்கிராமப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : protests ,Workers Union ,accidents ,lane road ,Lalgudi ,Bale ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...