×

மலைக்கோட்டை கோயில் கொப்பரையில் 900 லி. எண்ணெய் ஊற்றும் பணி துவக்கம் 300 மீ. திரி தயாரிப்பு நிறைவு ஜெனரேட்டரை இயக்கியபோது விபரீதம் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

திருச்சி, டிச.4: திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியனார். இதில் படுகாயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டேவிட் என்பவர் சொந்தமாக மைக்செட் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் பிள்ளைமாநகரைச் சேர்ந்த செல்லமுத்து மகன் மணிகண்டன்(23) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று பால்பண்ணை விஸ்வாஸ்நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு மின்சார தேவைக்காக டேவிட்டை தொடர்பு கொண்டு, ஜெனரேட்டர் வாடகைக்கு கேட்கப்பட்டது.

இதையடுத்து ஜெனரேட்டரை மணிகண்டன் மற்றும் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த விக்கி(எ)விக்னேஸ்வரன், லியோ ஆகியோர் கொண்டு சென்று பிட்டிங் செய்தனர். பின்னர் ெஜனரேட்டரை ஆன் செய்தனர். அப்போது எர்த் வயர் சரியாக கொடுக்கப்படவில்லை என்று கூறபப்படுகிறது. இதனால் ஜெனரேட்டரில் மின்சாரம் பாய்ந்தது. அதனை தொட்டபடி நின்றிருந்த மணிகண்டன், விக்கி, லியோ ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேய இறந்தார். விக்கி, லியோ ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அவரச சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : oil start Electricity kills ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....