×

வாகன ஓட்டிகள் தினறல் தெருக்கூத்து மூலம் வேளாண்துறை திட்டங்கள் விழிப்புணர்வு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 4: பூதலூரில் அட்மா திட்டத்தின்கீழ் (கலாஜதா) தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், கிசான் சம்மான் நிதி, மாந்தான் யோஜனா, நுண்ணீர் பாசன திட்டம், கூட்டு பண்ணையம் திட்டம் மற்றும் மண்வள பாதுகாப்பு இயக்கம் குறித்து ஆடல், பாடலுடன் கூடிய கலந்துரையாடல் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் பூதலூர் வேளாண்மை அலுவலர் நிவேதா பேசுகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றார்.துணை வேளாண்மை அலுவலர் எபினேசன் பேசுகையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் இதுவரை சேராத விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி சிட்டா மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றார். உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியன், துர்காதேவி, சுஸ்மிதா, பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் மற்றும் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags : motorists ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...