×

கோயிலில் நகை திருட்டு

புழல்: புழல் அருகே கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். புழல் அடுத்த தண்டல்கழனி பாலாஜி நகர் பகுதியில்  லட்சுமி அம்மன், ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பூசாரி சந்தோஷ்(38) வந்தார்.  பின்னர் கோயிலின் பின்புறமுள்ள மடப்பள்ளியை பார்க்க சென்றார். அப்போது, அதன் கதவு  உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் வைத்திருந்த 3 கிலோ எடை கொண்ட அம்மன் கலசம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு 2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று காலை செங்குன்றம் காவல் நிலையத்தில்  புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  மர்ம  ஆசாமிகளை தேடி வருகின்றனர். …

The post கோயிலில் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Thandalkalani Balaji… ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...