×

கார் மோதி வாலிபர் பலி

புழல்: சோழவரம் அடுத்த பஞ்செட்டி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விஜயன்(27). இவரது உறவினர் சதீஷ்(25). இருவரும் வேலை நிமித்தமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரே மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வருவதற்காக மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை புழல் அடுத்த சூரப்பட்டு டோல்கேட் மேம்பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார்  வேகமாக இவர்கள் பைக் மீது மோதியது. இதில், விஜயன் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். சதீஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். …

The post கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Vijayan ,Panchetti Metu Street ,Cholavaram ,Satish ,Dinakaran ,
× RELATED ரகசிய வெளிநாட்டு பயணம் முடித்து கேரளா திரும்பினார் பினராய் விஜயன்