×

மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் மார்க்கெட்டில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

மதுரை, டிச.4: மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கையால் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் கமிஷனர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடையில் சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விற்பனை செய்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்ததால் மத்திய காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இத்தடையை மீறினால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டத்தின்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆய்வின்போது சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஓம்சக்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Tags : shop ,
× RELATED எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய வாலிபர் கைது