×

திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் வயர்மேன் இல்லாததால் எலக்ட்ரீசனே மின் பழுதுகளை பார்க்கும் அவலம்

திருமங்கலம், டிச.4: திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் வயர்மேன்கள் இல்லாததால் கிராமங்களில் ஏற்படும் மின்சார பழுதினை எலக்ட்ரீசனை கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் மின்கோட்டத்தில் திருமங்கலம் டவுன், மேற்கு, கப்பலூர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட சப்டிவிசன்கள் அடங்கியுள்ளன. இதில் மேற்கு பகுதியில் பல்வேறு கிராமங்கள் வருகின்றன. குறிப்பாக கரடிக்கல், உரப்பனூர், சொரிக்காம்பட்டி, அனுப்பபட்டி, செட்டிகுளம், ஜெ.ஆலங்குளம், நல்லபுள்ளபட்டி, சித்தாலை உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளுக்கு வயர்மேன்கள் கிடையாது. இந்த கிராமங்களில் மின்பழுது ஏற்படும்போது பொதுமக்கள் மின்வாரியத்தை தொடர்புகொண்டால் வயர்மேன் வருவார் என பதில் கூறுவர். ஆனால் வயர்மேன் யாரும் வருவது கிடையாது.

இதனை தொடர்ந்து ஊராட்சி சார்பில் கிராமங்களில் எலக்ட்ரீசனை கொண்டு மின்பழுதினை சரிசெய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் கிராமமக்கள் மின்வாரியத்தை நம்பாமல் எலக்ரிடீசனை நாடும்நிலை நிலவுகிறது. எலக்ட்ரிசன் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் ஏறி பணிசெய்யும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தால் எந்த இழப்பிடும் கிடையாது. இருப்பினும் உயிரை துச்சமாக வைத்து இவர்கள் பணிபுரியும் நிலை உள்ளது. இந்தநிலையில் கரடிக்கல், சொரிக்காம்பட்டி, உரப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது இரவுநேரங்களில் தினசரி இரண்டு மணிநேரத்திற்கு மேல்மின்தடை ஏற்படுகிறது. இதனால் இருளில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்தடைக்குரிய காரணம் கேட்டால் மின்வாரிய அதிகாரிகள் பதில் எதுவும் சொல்வதில்லை அதே நேரத்தில் நகர்பகுதிகளில் மின்தடை செய்வதில்லை. இதற்குரிய காரணம் தெரியாமல் திருமங்கலம் கிராமமக்கள் புலம்பிவருகின்றனர். மின்வாரியம் அதிகாரிகள் வயர்மேன்களை நியமித்து, இரவு தேவையற்றி மின்தடையை சரிசெய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags : wireman ,villages ,Thirumangalam ,
× RELATED கழிவுநீர் கலக்குது.. குப்பைகள்...