×

அமெரிக்காவில் பல ஆண்டாக காத்திருப்போருக்கு வரப்பிரசாதம்: 3.80 லட்சம் கூடுதலாக கட்டி கிரீன் கார்டு பெற புதிய சட்டம்: இந்திய ஐடி துறையினருக்கு அதிக பலன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்ற ஏராளமான இந்திய ஐடி பணியாளர்கள் எச்1பி விசா பெற்று செல்கின்றனர். அங்கு குறிப்பிட்ட காலம்வரை பணியாற்றி பின், நிரந்தர குடியுரிமைக்காக கிரீன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். இதுபோல், கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன்கார்டு வழங்கும்படியாக அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதை தளர்த்தி வேலை அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிரீன் கார்டு வழங்க வகை செய்யும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், அதிபர் பைடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இதுதொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் சட்டக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த சட்டத்தின்படி, வேலை அடிப்படையிலான விண்ணப்பதாரர், கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்த முன்னுரிமை தேதி 2 ஆண்டுக்கும் மேலாகி இருந்தால், கூடுதல் கட்டணமாக ரூ.3.80 லட்சம் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்என கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டண திட்டம், இந்திய ஐடி பணியாளர்களுக்கு  மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post அமெரிக்காவில் பல ஆண்டாக காத்திருப்போருக்கு வரப்பிரசாதம்: 3.80 லட்சம் கூடுதலாக கட்டி கிரீன் கார்டு பெற புதிய சட்டம்: இந்திய ஐடி துறையினருக்கு அதிக பலன் appeared first on Dinakaran.

Tags : Washington ,US ,United States ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...