ஆமை வேகத்தில் நடக்கிறது சுகாதார நிலைய கட்டிட பணி

பந்தலூர், டிச. 4:  பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்று வட்டாரம்  பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டங்கள் மற்றும் சிறுகுறு விவசாயிகள் அன்றாடம் கூலிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்கவேண்டும் எனஅரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த வருடம் சேரம்பாடியில் கிராம சுகாதார செவிளியர் கட்டிடத்தில் போதிய இடவசதிகள்  இல்லாமல் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது புதிய ஆரம்ப சுகாதாரம் நிலையம் கட்டுவதற்கு  அப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்டம் நிலம் வழங்கியது.

அதன்பின் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சுகாதாரத்துறை சார்பில் ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு புதிய கட்டிடம் கட்டும்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்டிடம் பணியை துரிதப்படுத்தி கட்டி முடிக்க வேண்டும். மேலும் யானைஉள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஆரம்ப சுகாதாரம் நிலையம் சுற்றிலும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி  பணிகளை நிறைவு செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : health center ,
× RELATED அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்...