×

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து திருமயத்தில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி சீரமைக்க கோரிக்கை

திருமயம்.டிச.4: திருமயம் முக்கிய வீதி சாலைகளில் சேறும் சகதியுமாக மாறியதால் சாலையை கடக்க பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் திருமயம் முக்கியமானதாக உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமயத்தில் மேல்நிலைபள்ளி, தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், அரசு மருத்துவ மனை, காவல்நிலையம் இருப்பதோடு இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பஸ் வசதி இருப்பதால் இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் திருமயம் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அதே சமயம் இங்குள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான திருமயம் கோட்டை கோயிலை கண்டுகளிக்க உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருமயத்தில் முக்கிய வீதிகளாக கருதப்படும் கோட்டைகோயில் வீதிகள், காமராஜர்புரம் வீதி, சந்தைபேட்டை வீதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவீதிகளின் சாலைகள் ஏற்கனவே சேதமடைந்து இருந்தது. இதனிடையே அப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சேதமடைந்த சாலைகளின் பள்ளங்களில் மழைநீர் அதன் மீது வாகன போக்குவரத்து இருப்பதால் சாலை சேறும் சகதியுமாக மாறி மேலும் மோசமடைந்து வருகிறது. மேலும் சாலையை கடக்க பள்ளி மாணவர்கள், முதியோர்கள், நோயாளிகள் சிரமப்படுவதோடு பாதசாரிகள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் உடலில் சேற்றைவாரி இறைக்கின்றன. இதனால் அவ்வழியாகசெல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் முழுவதும் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : reorganization ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...