×

தென்னேரி ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் தரைப்பாலம் மூழ்கியதால் சாலை துண்டிப்பு

வாலாஜாபாத், டிச. 4: வாலாஜாபாத் அருகே தென்னேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால்,சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் 10 கிராம மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரியின் மூலம் 5,500 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாசனம் அடைகின்றன. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால், 18அடி ஆழம் கொண்ட தென்னேரி ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பியுள்ளது.  இதையொட்டி, 16 கனஅடி உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், 30க்கும் மேற்பட்ட கிராம மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து உபரிநீர் வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலை மஞ்சமேடு தரைப்பாலம் வழியாக வெளியேறுகிறது.

ஆனால், அந்த தரைப்பாலத்தில் 3 அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால், அந்த வழியாக செல்லும் தென்னேரி, அகரம், மஞ்சமேடு, அய்மஞ்சேரி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், மக்கள் வாரணவாசி வழியாக  கார், பஸ், தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பஸ், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் சுமார் 10 கிமீ சுற்றி செல்கின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மஞ்சமேடு தரைப்பாலத்தின் மேல் செல்லும் உபரிநீர் வெகுவாக குறைந்ததால் தற்போது இந்த வழியாக பைக்கில் செல்ப வர்கள், ஊர்ந்து செல்கின்றனர்.மேலும், தென்னேரி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதை பார்க்க சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து பார்க்கின்றனர். இதனால், இந்த பகுதியில், போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட செய்ய, பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Tennessee Lake ,
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...