×

எந்த பதவிக்கு யார் போட்டியிடலாம்?

தரங்கம்பாடி, டிச. 4:  நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர்கள் பொறுப்பிற்கு எந்தெந்த வார்டில் யார் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 8, 9, 10 என 3 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. அந்த 3 வார்டுகளும் பெண்கள் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு 30 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதில் வார்டு 2,3,5,6,10,12,14,17,19,23,30 ஆகிய வார்டுகள் பொதுவாகவும், 1,4,20,21 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுவாகவும், 7,16,18,22,25 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 8,9,11,13,15,24,26,27,28,29 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் ஆறுபாதி, காளஹதிஸ்நாதபுரம், கஞ்சாநகரம், கீழையூர், மருதம்பள்ளம், நல்லாடை, நெடுவாசல், திருக்கடையூர், விளாகம், ஆக்கூர், எடுத்துக்கட்டி, நத்தங்குடி, மாணிக்கபங்கு, மாத்தூர், முக்கரும்பூர், நத்தம், தலையுடையார்கோவில்பத்து, உத்திரங்குடி ஆகிய 18 ஊராட்சி தலைவர் பொறுப்பு ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலவேலி, அன்னவாசல், அரசூர், சந்திரபாடி, ஈச்சங்குடி, இளையார், காட்டுச்சேரி, கிடாரங்கொண்டான், கிடங்கல், மேலையூர், மேலபெரும்பள்ளம், முடிகண்டநல்லூர், பாகசாலை, பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, திருக்களாச்சேரி, திருவிடைக்கழி, திருவிளையாட்டம், விசலூர் ஆகிய 19 ஊராட்சி தலைவர் பொறுப்பு பெண்கள் பொதுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. எரவாஞ்சேரி, கூடலூர், இலுப்பூர், காளமளநல்லூர், கருவாழக்கரை, காழியப்பநல்லூர், கீழ்மாத்தூர், கீழபெரும்பள்ளம், கிள்ளியூர், கொண்டத்தூர், மடப்புரம், மாமாகுடி, மேமாத்தூர், நடுக்கரை, நரசிங்கநத்தம், அரசலூர், சே.மங்கலம், செம்பனார்கோவில், தில்லையாடி, திருச்சம்பள்ளி ஆகிய 20 ஊராட்சி தலைவர் பொறுப்பு பொதுவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்றிய குழு தலைவர் பொறுப்பு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...