×

முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் மரணம்

புதுச்சேரி,  டிச. 4:  புதுவை குருவிநத்தம் தொகுதியில் 1985 மற்றும் 1990ல் நடந்த சட்டசபை தேர்தலில்  திமுக சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்று 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர் ராமநாதன். மதிமுகவில்  மாநில செயலாளராக இருந்து அதன்பிறகு அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கினார்.பின்னர் தீவிர அரசியலில் இறங்கிய அவரது மகன் ராதாகிருஷ்ணன் என்ஆர்  காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக  ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நேற்று மதியம்  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமநாதனின் உடல் அவரது சொந்த ஊரான குருவிநத்தத்தில் பொதுமக்கள்  அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அதன்பிறகு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.


Tags : MLA ,Ramanathan ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...