×

மாநகராட்சி 5வது மண்டலத்தில் குப்பை குவியலால் துர்நாற்றம் : போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு

தண்டையார்பேட்டை:  சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 52வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெரு உள்ளிட்ட 7 தெருக்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை மணிகண்டன் தெருவில் குடியிருப்புக்கு மத்தியில் குவித்து வைத்துள்ளனர். தற்போது பெய்த மழையில் குப்பை நனைந்துள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடிப்பதால் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், மர்ம காய்ச்சல் பாதிப்பில் பலர் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.
 
தெருவில் தேங்கிய குப்பையை அகற்றும்படி மாநகராட்சி ஊழியர்களிடம் மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விரைவில், இந்த குப்பையை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : corporation ,zone ,struggle ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு