×

கடவூர் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதை பிரச்னை ஆற்றுவாரி வழியாக சடலத்தை தூக்கி சென்ற அவல நிலை போலீசார் குவிப்பால் பதற்றம்

கடவூர், டிச. 3: தரகம்பட்டி அருகே இடையபட்டியில் 1 கி.மீ. செல்ல வேண்டிய இடுகாட்டிற்கு 3 கி.மீ. தூரம் ஆற்றுவாரிக்குள் சடலத்தை சுற்றி கொண்டு சென்ற பரிதாப நிலை ஏற்பட்டது.கடவூர் ஊராட்சி இடையபட்டியில் கடந்த சில மாதங்களாகவே சுடுகாட்டு பாதைப் பிரச்சனை இருந்து வந்தது. ஒரு தரப்பினர் காலம் காலமாக குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் சடலத்தைக் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு தரப்பினர் தடுத்து வந்தனர்.அதையும் மீறி அந்த பாதை வழியாக கடந்த வாரம் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.அதன் பிறகு அமைதி பேச்சு வார்த்தை குளித்தலையில் நடந்தது. இதில் இரு தரப்பினர் சார்பிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தினமும் 50க்குகும் மேற்பட்ட போலீசார் இரவும், பகலுமாக பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (63) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

இவரது சடலத்தை வழக்கம்போல் கொண்டு செல்லும் பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாததால் சுமார் 3 கி.மீ சுற்றி ஆற்றுவாரிக்குள் கொண்டு சென்றனர். ஒரு வேளை மழை நீர் இருந்ததால் சடலத்தை ஆற்றுவாரி வழியாக கொண்டு சென்றிருப்பார்கள் என அதிகாரிகள் நினைத்து கொண்டனர்.மேலும் பதற்றம் ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி. கும்மராஜா, கடவூர் தாசில்தார் மைதிலி, இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Sudakkadu ,road ,Kadugur ,riverbank ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி