×

கடவூர் தாலுகா முள்ளிப்பாடியில் கோயில் கும்பாபிஷேக விழா

கரூர், டிச. 3: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி பகுதியில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடவூர் தாலுகா முள்ளிப்பாடி பகுதியில் விநாயகர், முருகன் உட்பட பல்வேறு பரிவார குலதெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு, நவம்பர் 24ம் தேதி அன்று காலை நடந்த சாமி சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்வினை தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி வரை முகூர்த்தக்கால் நடுதல், காப்புக்கட்டுதல், காவிரி ஆறு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும், ஆராதனை அபிஷேகங்களும் நடந்தன.தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை 8.30மணியளவில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து பரிவார தெய்வங்களுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.




Tags : Temple Kumbabishekha Festival ,Kadavur Taluk Mullipady ,
× RELATED குகை வழிப்பாதையில் குடிமகன்கள் அட்டகாசம்