×

அன்னவாசல் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள், பூக்கள், மலர்கள் மேலாண் பயிற்சி

இலுப்பூர், டிச.3: அன்னவாசல் வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் , பூக்கள், மலர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது. அன்னவாசல் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அன்னவாசல் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள், பூக்கள், மலர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது. அன்னவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பழனியப்பா தலைமையில் விவசாயிகள் காந்தி கிராமம் மற்றும் ரெட்டியார் சத்திரம் காய்கறி மகத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் நிலப்போர்வை தொழில் நுட்பத்தில் காய்கறி சாகுபடி செய்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளான உழவியல் முறைகள், உயிரியல் முறைகளான இனக்கவர்ச்சி பொறி, மற்றும் மஞ்சள் ஒட்டுப் பொறி செயல்விளக்கம் மற்றும் ரசாயன முறைகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளித்தார்.

காய்கறி மகத்துவ மையத்தின், திட்ட மேலாளர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா தோட்டக்கலை பயிர்களில் ரகங்களை தேர்வு செய்தல், விதை நேர்த்தி, நடவு பருவம், குழித்தட்டு முறையில் நாற்றங்கால் உற்பத்தி செய்தல் மற்றும் மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் நீர் நிர்வாகம் பற்றி பயிற்சி அளித்தார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் சதாசிவம் சொட்டு நீர் பாசன முறைகள் பற்றி விளக்கி கூறினார். காய்கறி மகத்துவ மையத்தின், இளநிலை ஆராய்ச்சியாளர் ராஜேந்திரன் தோட்டக்கலை பயிர்களில் உள்ள புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை பற்றி எடுத்துக் கூறினார்.

Tags :
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...