×

அன்னவாசல் அருகே பைக்குகள் மோதலில் வாலிபர் பரிதாப பலி

புதுக்கோட்டை, டிச.3: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் எடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (22). மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர். இருவரும் அதே பகுதியை சேர்ந்த மருதன் மகன் அருள் (16) என்பவரும் பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் நோக்கி சென்றனர். அப்பொழுது எதிரே அன்னவாசலில் இருந்து செக்கநாதன்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் மண்வேளாம்பட்டியை சேர்ந்த கார்த்தி (25) பொன்னுச்சாமி (25) மணிராஜ் (18) ஆகிய மூவரும் சென்றனர். அப்பொழுது இரு பைக்குகளும் சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் 5பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் ராஜா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Plaintiff ,Annawasal ,
× RELATED அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில்...