×

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் திருமயம் கோட்டையில் மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் தூய்மை பணி

புதுக்கோட்டை, டிச.3: தொல்லியல் வாரவிழாவை முன்னிட்டு மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவர்கள் திருமயம் கோட்டையில் தூய்மை பணிகளை நேற்று செய்தனர். இந்தியாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று புகழ் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. இந்திய தொல்லியல் துறை பற்றி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தொல்லியல் வாரவிழாவை கொண்டாடும் நோக்கத்தில் மற்றும் இதனை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியும் இந்த தொல்லியல் வாரவிழாவை போற்றும் விதமாக திருமயம் கோட்டையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

திருமயத்தில் மலைமீது கோட்டை அமைந்துள்ளது. குடவரை மற்றும் கற்றளிகோயில், பாறை ஓவியம் உள்ளது. தொல்லியல் வாரவிழாவை கொண்டாடும் நோக்கில் இதன் மரபுகளை பாதுகாக்கும் விதமாக தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மரபு கலை பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் பாண்டியன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சரண்குமார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Mount Zion School ,Thirumayam Fort ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை...