×

விவசாயிகள் கவலை நண்டலாற்றில் வௌ்ளம் கரைபுரண்டு ஓடியதால் 200 ஏக்கர் சம்பா மூழ்கியது மயிலாடுதுறை, கொள்ளிடம் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, டிச.3: மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்தும் விட்டு விட்டும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்துவருவதால் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள தெரு மற்றும் சாலைகள் 120 கி.மீ அளவுக்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்சம் 20 கி.மீ வரை முற்றிலும் சேதமடைந்துள்ளது, மேலும் 50 சதவீதத்திற்கு மேல் சாலைகளில் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மீதமுள்ள சாலைகள் மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது. நகராட்சி சாலைகள் மட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை சாலைகளும் படுமோசமாகிவிட்டன. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளது.வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் நிவராணத்தை ஒதுக்கி சாலை சேதத்தை கணகெடுத்து சரிசெய்யும் அரசாங்கம், அதைவிட அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால், உடனே மயிலாடுதுறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு தேவையான நிதியை பெற்று சாலைகளை சரிசெய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கொள்ளிடம்:கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்திலிருந்து ஆலங்காடு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மேம்படுத்தவில்லை. இதனால் சாலையில் பல இடங்களில் பள்ளம் தோன்றி தண்ணீர் தேங்கியே கிடக்கிறது. இதனால் உமையாள்பதி கிராமத்திலிருந்து ஆலங்காடு, குடமுரட்டி, மகாராஜாபுரம், வேட்டங்குடி, எடமணல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோர் மிகுந்த அவதியடைகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அன்பழகன் கூறுகையில் உமையாள்பதியிலிருந்து ஆலங்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இச்சாலையை உடனே அதிகாரிகள் மேம்படுத்தவில்லை என்றால் சீர்காழியியிலிருந்து மாதானம் செல்லும் சாலையில் உமையாள்பதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.51 வீடுகள் சேதம்தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் கொத்தங்குடி, கடக்கம், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, எரவாஞ்சேரி, வடகரை உள்ளிட்ட பல கிராமங்களில் 51 கூரை வீடுகள் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. அவைகளில் 3 வீடுகள் முழு சேதமடைந்துள்ளன. மேலும் பள்ளிகளிலும் தண்ணீர் புகுந்தது. ஆயப்பாடியில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : roads ,areas ,flooding ,Mayiladuthurai ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...