×

பென்னிகுக் மணிமண்டபத்தில் கண்காட்சி அமைக்க வேண்டும்

கூடலூர், டிச.3: முல்லைப்பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுக்கை நினைவு கூரும் விதமாக, தமிழக அரசு லோயர்கேம்ப்பில் 2013ல் அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டியது. அன்று முதல் ஏராளமான வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் மணிமண்டபத்தை பார்வையிட்டு செல்கின்றனர். அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாறை கல்வெட்டாக அமைக்க வேண்டும், அவர் பயன்படுத்திய பொருட்களை மணிமண்டபத்தில் கண்காட்சியாக வைக்க வேண்டும் என கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், குடிநீர், கழிப்பிட வசதியின்றி மண்டபம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாற்றை கல்வெட்டாக அமைக்க வேண்டும், பென்னி குக்கின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட இருக்கும் நிலையில், அவரது புகைப்படம், அவர் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய கண்காட்சியை மணிமண்டபத்தில் துவக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : exhibition ,Pennigook Mall ,
× RELATED உதகை மலர் கண்காட்சி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் பிரமிப்பு!!