×

சலவை தொழிலாளர்கள் மனு 8ம் வகுப்பு படித்தோருக்கு கருவூலத்தில் ‘ஓஏ’ வேலை

தேனி, டிச.3: தேனி மாவட்ட கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வருகிற 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேனி மாவட்ட கருவூல அலுவலகத்தில் மூன்று அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 35 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்சம் 32 வயதும், இதரபிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பில்லை.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் theni.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து வருகிற டிசம்பர் 18ம் தேதி மாலைக்குள் தேனி மாவட்ட கருவூல அலுவலர், தேனி மாவட்ட கருவூல அலுவலகம்,தேனி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Tags : Laundry Workers ,Treasury ,
× RELATED சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்