×

தொண்டி பகுதியில் வயல்களில் ேதங்கி நிற்கும் தண்ணீரால் அழுகும் பயிர்கள்

தொண்டி, டிச.3: தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால்
வயல்களில் உள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா முழுவதும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில் தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதி வயல்கள் முழுவதும் தண்ணீரில் நிரம்பி மூழ்கியுள்ளது. கடலுக்கு தண்ணீர் சென்றாலும் மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால், தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெரு தண்ணீர் மற்றும் அனைத்து தண்ணீரும் ஒருங்கே செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தொடாந்து வயல்களில் தண்ணீர் கிடப்பதால் தற்போது நட்ட பயிர்கள் வேர் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது, கடந்த சில நாட்களாக அதிகமாக மழை பெய்கிறது. கண்மாய் மற்றும் குளம் தண்ணீர் நிரம்பி விட்டதால் கடலுக்கு தண்ணீரை அனுப்புகிறோம். ஆனால் மழை விடாமல் பெய்வதால் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பயிர்கள் அழுகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர். தெரு தண்ணீர் மற்றும் அனைத்து தண்ணீரும் ஒருங்கே செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து வயல்களில் தண்ணீர் கிடப்பதால் தற்போது நட்ட பயிர்கள் வேர் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : area ,Thondi ,
× RELATED தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை