×

தமிழர் விடுதலை களம் மனு சட்ட பயிற்சி முகாம்

பழநி, டிச. 3: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் தலித் கலை இலக்கிய கழகம் சார்பில் சட்ட பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். நெய்க்காரப்பட்டி தலைவர் பொன்ராஜ், செயலர் ரங்கநாதன், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவிபட் உலகளாவிய அருந்ததியினர் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கொள்கை பரப்பு செயலர் கிரிராஜா வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பேசினார். மாநில தலைவர் ஜாபர் தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் ஒற்றுமை குறித்து பேசினர். கூட்டத்தில் பழநி அரசு மருத்துவமனையில் சுகாதார வசதி ஏற்படுத்தப்பட்டு, தேவையான பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். பெரியகலையம்புத்தூர், எல்லமநாயக்கன்புதூர் போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tamil Eelam Liquidation Framework Training Camp ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் நிறைவு