×

கந்திக்குப்பத்தில் தனியார் பஸ் மோதி ஜவுளி வியாபாரி பலி

கிருஷ்ணகிரி, டிச.3:பர்கூரை அடுத்த அம்மேரி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(41). ஜவுளி வியாபாரி. இவர் நேற்று மாலை பர்கூரில் இருந்து வரட்டனப்பள்ளி செல்வதற்காக, தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற தனியார் பஸ் கந்திக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, பஸ் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் வாசுதேவன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : textile dealer ,
× RELATED வேளாண் அதிகாரி விளக்கம்...