மும்பை- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியாக இயக்கம் திமுக, கொமதேகவினர் மலர்தூவி வரவேற்பு

நாமக்கல், டிச.3: மும்பை- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியாக நேற்று இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு திமுகவினர் மற்றும் கொமதேகவினர் மலர்தூவி வரவேற்றனர்.மும்பையில் இருந்து தினமும் நாகர்கோயில், நெல்லை செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும் என, நாமக்கல் எம்பி சின்ராஜ் மத்திய ரயில்வேத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, நேற்று முன்தினம் முதல் மும்பை- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில், நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 2.30 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து, நாமக்கல் ரயில்வே ஸ்டேசன் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணைஅமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில், திமுக மற்றும் கொமதேகவினர் மலர்தூவி வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், திமுக நகர பொறுப்பாளர் ஆனந்த், சட்டதிட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மகளிர் அணி அமைப்பாளர் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 6ம் தேதி முதல் நாமக்கல் வழியாக செல்கிறது. மும்பை-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய 4 நாட்களும், மும்பை- நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்களும் நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது.

Related Stories:

>