நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாமக்கல், டிச.3: யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான, சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் மீது, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை, நேற்று நடைபெற்றது. அப்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயந்தி, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, யுவராஜை போலீசார் மீண்டும் திருச்சி சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Related Stories:

>