×

கள்ளத்துப்பாக்கியை தானாக ஒப்படைத்தால் நடவடிக்கை இல்லை எஸ்பி அறிவிப்பு

நாமக்கல், டிச.3:தானாக முன் வந்து கள்ளத்துப்பாக்கியை ஒப்படைத்தால், நடவடிக்கை கிடையாது என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, போதமலையில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், விவசாய பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பதற்கும், மலைப்பகுதிகளில் வேட்டையாடவும் உரிமம் பெறாமல், கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். உபயோகம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளின் உதிரி பாகங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். இது சட்டவிரோதமான செயலாகும். கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர், அதை அருகாமையில் உள்ள காவல்நிலையங்களில் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட இடங்களில் வைத்துவிட்டு அது பற்றி காவல்நிலைய தொலைபேசி எண் அல்லது மாவட்ட தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண்களில் (9498101020, 04286-280500) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. கள்ள துப்பாக்கிகளை காவல்துறை, வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்யும்போது, சம்பந்தபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சேந்தமங்கலத்தில் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்கள், ராசிபுரம் போதமலை மற்றும் எருமப்பட்டி மலைஅடிவாரத்தில், கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : SP ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...