×

அமராவதி அணை நீர்மட்டம் 4 நாளில் 3 அடி உயர்ந்தது

உடுமலை,டிச.3: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாகும். இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கடந்த ஒரு வார காலமாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. கடந்த 29ம் தேதி அணையின் நீர்மட்டம் 63.55 அடியாக இருந்தது. 349 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 55 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 30ம் தேதி வினாடிக்கு 755 கன அடி நீர் வந்தது. நீர்மட்டம் 64.74 அடியாக உயர்ந்தது. வெளியேற்றம் 55 கன அடியாக இருந்தது. அன்றைய தினம் அணைப்பகுதியில் 15 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. டிசம்பர் 1ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு 818 கன அடி தண்ணீர் வந்தது.அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி 67 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.

Tags : dam ,Amaravathi ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...