×

வள்ளியூர் சாமியார் பொத்தை குரு பூஜை விழாவில் பரதநாட்டியம்

வள்ளியூர், டிச.3: வள்ளியூர் சாமியார் பொத்தை புரம் முத்துகிருஷ்ணசுவாமியின் 106வது குருபூஜை விழாவை முன்னிட்டு புரம் மகாமேரு மண்டபத்தில் இரண்டாம்  நாள் நிகழ்ச்சியில்  பரதநாட்டியம் நடந்தது.  முத்துகிருஷ்ணசுவாமி ஜீவசமாதி அடைந்த சாமியார் பொத்தை புரத்தில் மகாமேரு மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.  ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடக்கும் ­­­முத்துகிருஷ்ண சுவாமியின் 106வது குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழா டிச.1ம்தேதி   கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைதொடர்ந்து  நேற்று இரண்டாம் நாள்நிகழ்ச்சியில் காலையில்  விசேஷ  பூஜைகள் நடந்தது. மாலை 5.30 மணியளவில் மதி ஊர்மிளா சத்தியநாராயணா குழுவினரின்  சங்கல்ப சமர்ப்பணம் பரதநாட்டியம்  கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Valliyoor Saamiar Pottu Guru Pooja Ceremony ,
× RELATED சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா