×

மாத்தி ரயில்வே கேட் திடீெரன திறக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம், டிச. 3: கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட்டில் திடீரென திறக்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படனர். இதையடுத்து ரயில்வே கேட்டை ஊழியர்கள் சரி செய்தனர்.கும்பகோணம் மாத்தி கேட் வழியாக சாக்கோட்டை, கொற்கை, நந்திவனம், மருதாநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லலாம். இதனால் 24 மணி நேரமும், பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும். மேலும் மாத்தி கேட் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. ரயில் வரும் நேரங்களில் மாத்தி ரயில்வே கேட்டை மூடினால் இருபுறங்களிலும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்கும். பின்னர் ரயில் சென்ற பிறகு கேட்டை திறந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரயில்வே கேட்டை கடக்க 30 நிமிடத்திற்கு மேலாகி விடும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் கும்பகோணத்தை நோக்கி ரயில் வந்தது. இதற்காக ரயில்வே கேட்டை ஊழியர் மூடினார். பின்னர் ரயில் சென்ற பிறகு ரயில்வே கேட்டை ஊழியர் திறக்க முயன்றார். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொறுத்திருந்து பார்த்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி அவர்களது சொந்த ஊருக்கு சென்றனர்.இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து பார்த்து 3 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்து ரயில்வே கேட்டை திறந்தனர்.

Tags : Motorists ,opening ,Mathi Railway Gate ,
× RELATED ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின்...