×

ஒரத்தநாட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான இந்து அறநிலையத்துறை மடம் மீட்பு

ஒரத்தநாடு, டிச. 3: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணா மடத்துக்கு சொந்தமான பஜனை கூடம் 1,800ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தது. இந்த மடத்தில் பஜனை நடந்து வந்தது. 60 ஆண்டுகளாக மடத்தில் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் அக்ரஹாரம் பகுதியில் புரோகிதர் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் இந்த மடத்தை ஆக்கிரமிப்பு செய்தார். மேலும் மடத்தில் தனது குடும்பத்தினரை தங்க வைத்து தான் மட்டும் தஞ்சையில் வசித்து வந்தார்.இதையடுத்து மடத்துக்கு சொந்தமான வீட்டை மீட்டெடுப்பதற்காக கிருஷ்ணா மடம் நிர்வாகம், ஒரத்தநாடு அருகே உள்ள கீழ உளுர் கிராமத்தில் இருக்கும் பருதியப்பர் கோயில் பாஸ்கரேஸ்வரர் ஆலய நிர்வாக அதிகாரியை தர்க்காராக நியமித்ததுஇதையடுத்து ரோகிதர் ராமகிருஷ்ணன் ஆக்கிரமிப்பு செய்திருந்த இந்த வீட்டை மீட்டு தரக்கோரி பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் கிருஷ்ணா மடம் சார்பில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து 2017ம் ஆண்டு இந்து அறநிலையத்துறைக்கு இந்த வீட்டை ராமகிருஷ்ணன் விட்டுவிட வேண்டுமென நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால் ராமகிருஷ்ணன் இந்த வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து கோர்ட்டில் இந்து அறநிலையத்துறை முறையிட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தஞ்சாவூர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம் குமார் தலைமையில் ஒரத்தநாடு இந்து அறநிலையத்துறை இஓ சண்முகம், ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ், ஒரத்தநாடு சப்இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்ற அலுவலர்களுடன் சென்று ராமகிருஷ்ணன் குடியிருந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மீட்டெடுக்கப்பட்ட ராமகிருஷ்ணா மடத்தின் வீட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டது. ரூ.2 கோடி மதிப்பிலான 29 சென்ட் பரப்பளவு இடத்தை இந்து அறநிலையத்துறையால் மீட்டெடுக்கப்பட்டது.


Tags : Recovery ,Hindu Religious Center ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...