×

வாகைக்குளம் ஸ்காட் அறிவியல் மையத்தில் அடர்நடவு கொய்யா சாகுபடி பயிற்சி

புதுக்கோட்டை, டிச. 3: வாகைக்குளம் ஸ்காட் அறிவியல் மையத்தில் அடர்நடவு முறையில் கொய்யா சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  தூத்துக்குடி அடுத்த வாகைக்குளத்தில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்காட் வேளாண்  அறிவியல் மையம்  செயல்பட்டு வருகிறது. இம்மையம் விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளான கால்நடை அறிவியல், தோட்டக்கலை, பயிர் பாதுகாப்பு,  உழவியல்,  வேளாண் விரிவாக்கம் , மற்றும்  மனையியல் துறை  மூலமாக வேளாண் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் விரிவாக்கத் துறையினருக்கு  அவ்வப்போது பல்வேறு பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில அடர்நடவு முறையில் கொய்யா சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஆர்வத்துடன் திரளாகப் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண்  கல்லுரி மாணவர்கள் கொய்யா அடர் நடவுமுறை குறித்து செயல்முறை  விளக்கமளித்தனர்.

 சுரேஷ் க்யான் விஹார் வேளாண் கல்லூரி, ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் 11 பேர் ‘கிராம தங்கல்  திட்டம்’ மூலம் வேளாண் தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க கடந்த 3 மாதங்களாக பயிற்சி எடுத்து வரும்நிலையில் இந்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் சுரேஷ் க்யான் விஹார் வேளாண் கல்லூரி மாணவர்கள் கொய்யா அடர் நடவுமுறை குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் அடர் நடவுமுறையில் 3க்கு 2மீ இடைவெளியில் 667 மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கினர். சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் கொய்யா கன்றுகளுக்கு நீர் மேலாண்மை பற்றியும் எடுத்துரைத்தனர். அடர்நடவுமுறைக்கு சிறந்த ரகங்களான லக்னோ-49 (l-49), லலித்,சுவேதா,போன்ற ரகங்களை பரிந்துரைத்தனர். இவ்வாறு அடர்நடவுமுறையில் பயிர் செய்வதன் மூலம் குறைந்த பரப்பளவில் அதிக லாபம் ஈட்டலாம்  என்பது குறிப்பிடத்தக்கது.    40 டன்வரை மகசூல் : இதுகுறித்து ஸ்காட் வேளாண் அறிவியல் மையமுதன்மை விஞ்ஞானியும், தலைவருமான வேல்முருகன் கூறுகையில், ‘‘ 1 எக்டர் பரப்பளவில் 40 டன் வரை மகசூல் ஈட்டலாம் என்று விவசாயிகளுக்கு தெரிவித்தார்.    ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து விவசாயிகள், பண்ணைமகளிர், கிராமப்புற இளைஞர்களுக்கு அளிக்கப்படும்’’ என்றார்.

Tags : Waikulam ,Scott Science Center ,
× RELATED திருமங்கலம் அருகே வாகைகுளம் சுகாதார...