×

புதூரில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

எட்டயபுரம், டிச. 3: புதூரில் அமமுக ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட கட்சியினர் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  புதூர் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதூர் ஒன்றிய அமமுக செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இலக்கிய அணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், என்.ஜெகவீரபுரம் அமமுக ஊராட்சி செயலாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் சோலைராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., புதூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தனஞ்செயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தனபதி, என்.ஜெகவீரபுரம் அதிமுக கிளைச்செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.

Tags : Introverts ,AIADMK ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...