×

குரூப் 2 நேர்காணல் பதவி தேர்வு சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி, டிச. 3: குரூப் 2 நேர்காணல் பதவிக்கான தேர்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 365 பேர் தரவரிசையில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 நேர்காணல் பதவிக்கான 1338 காலி பணியிடங்களை நிரப்பும்பொருட்டு முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி நடத்தியது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சிபெற்ற 800 மாணவர்கள் தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த பிப். 23ம் தேதி நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற 2667 பேர் 1: 2 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த 527க்கும் மேற்பட்டவர்களில் கடந்த மாதம் 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த 365 பேர் தரவரிசையில் முன்னிலை பெற்று சாதனை படைத்தனர். இவர்களில் இங்கு பயின்ற மாணவிகளில் செல்வி சுமிதா 11வது இடத்தை வென்றார். இவர்களை சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் பயிற்சி மையங்களில்  அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியாலும், கடின உழைப்பாலும் 365 பேர் தரவரிசையில் முன்னிலை பெற்றது மகிழ்ச்சி தருகிறது’’ என்றார். இதனிடையே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி பட்டுராஜ், கனிமுருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags : Group 2 ,
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...