×

பயன்பாட்டிற்கு திறக்க மக்கள் வலியுறுத்தல் அமைதி ேபச்சுவார்த்தையில் உடன்பாடு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு

நீடாமங்கலம்,டிச.3: அமைதி பேச்சுவார்த்தையில உடன் ஏற்பட்டதையடுத்து ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டுபோடும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடியில் தமுமுக,மமக சார்பில் ஆலோசனை கூட்டம் கடந்த 29ம் தேதி தலைவர் சாகுல்அமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து இன்று (3ம் தேதி) ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்கொடி தலைமையிலும்,நீடாமங்கலம் வட்டாரவளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உஷாராணி, மற்றும் போலீசார் முன்னிலையில் கூத்தாநல்லூரில் சமாதானகூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பொதக்குடியில் உள்ள தெருக்களில் உள்ள குப்பைகள் 15 நாட்களுக்குள் அகற்றப்படும்,தெருக்களில் சுற்றி திரியும் ஆடு,மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்கப்படும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அனைத்து கோரிக்கைகளும் சமாதான கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தற்காலிகமாக பூட்டு போடும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தமுமுக தலைவர் முஜிபுர்ரஹ்மான்,மாவட்டச்செயலாளர் நவாஸ்,மமக மாநில விவசாய அணி துணைச்செயலாளர் ரஹ்மத்துல்லா,மமக மாவட்ட துணைச்செயலாளர் ஜெகபரலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : lockout ,
× RELATED புதுப்பட்டியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்