பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி, டிச.1: பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து அதனை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தியும், நந்திவரம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் வாரிசுகளுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்பதில் தொடர்ந்து அலட்சிய போக்கை கையாளும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தொகுதி செயலாளர் தென்னவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேதகிரி, ராஜ்குமார், ஆனந்தன், வெங்கடேசன், வீரா, முத்தையா, மணிமாறன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் திராவிட முரளி வரவேற்றார்.

சிறப்பு அழைப் பாளர்களாக காஞ்சி மாவட்ட செயலாளர் தமிழரசன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன், துணை செயலாளர் மாணிக்கராஜ், மண்டல செயலாளர் சூ.க.விடுதலைசெழியன், மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கராத்தே பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் சாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். காஞ்சி மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ், நிர்வாகிகள் ஞானசாமுவேல் சாந்தசீலன், அகஸ்டின், பிரேம்ராஜ் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: