×

தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக்கில் அறிவியல் கண்காட்சி

நாசரேத்,டிச.1: தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 10வது அறிவியல் கண்காட்சி நடந்தது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவ-மாணவிகளுக்கு உணர்த்தும் விதமாக பல்வேறு அறிவியல் படைப்புகளின் கண்காட்சியை காடன்குளம் ஜோசப் நடுநிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் கார்லஸ், கல்லூரி தாளாளர் முத்தையாபிள்ளை ஆகியோர் தலைமை வகித்து கண்காட்சியினை தொடங்கி வைத்தனர். மாணவ- மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்பின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். ஆடை அலங்காரப் போட்டி, கழிவுகளிலிருந்து கலை பொருள்கள் செய்தல், நடனப் போட்டி, பல குரல் பேசுதல், எழுத்துப்போட்டி நடந்தது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை கண்டு களித்தனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். மெட்ரிக் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல் பரிசுக்கான கோப்பையை திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை திருச்செந்தூர் காஞ்சிசங்கரா அகாடமிக் மெட்ரிக்குலேசன் பள்ளியும், மூன்றாம் பரிசுக்கான கோப்பையை வள்ளியூர் கிங்ஸ் சிபிஎஸ்இ பள்ளியும் பெற்றன.அரசுப் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல் பரிசுக்கான கோப்பையை விஜயஅச்சம்பாடு செந்திலாண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியும், மூன்றாம் பரிசுக்கான கோப்பையை சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு திசையன்விளை வருவாய் வட்டாட்சியர் பட்டமுத்து  பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். துணை முதல்வர் விமலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் முத்தையாபிள்ளை, முதல்வர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Science Exhibition ,Southern Vijayanarayana Rect Polytechnic ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி