×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருக்குடைகள் ஊர்வலம்

திருவண்ணாமலை, டிச.1: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருக்குடைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று(ஞாயிறு) காலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருவிழ வருகிற 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சென்னை பல்லாவரம் அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் அண்ணாமலையார் கோயிலுக்கு திருக்குடைகள் உபயம் வழங்குவது வழக்கம். அதன்படி 15ம் ஆண்டாக ₹3 லட்சம் மதிப்பில் 13 திருக்குடைகள் உபயம் அளிக்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜை, அபிசேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் இருந்து அருணாசலா சேவா சங்கத்தின் தலைவர் ரவி தலைமையில் 13 திருக்குடைகளின் ஊர்வலம் 16 கால் மண்டபம் முன்பிருந்து புறப்பட்டு, மாடவீதியில் மேளதாளம் முழங்க வந்தது. அதைத்ெதாடர்ந்து ஆன்மிக சேவா சங்க நிர்வாகிகள் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகரிடம் ₹3 லட்சம் மதிப்பிலான 13 திருக்குடைகளை வழங்கினர்.

Tags : Thirukkudai ,Carnatic Deepath ,Thiruvannamalai ,festival ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...