×

கருப்பாநதி, ராமநதி அணையில் உபரிநீர் வெளியேற்றம்

கடையநல்லூர், டிச.1: கடையநல்லூரை அடுத்த கருப்பாநதி அணையின் மொத்த கொள்ளளவு 72.10 அடி ஆகும். நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டில் கனமழை பெய்ததையடுத்து 70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்து 72 அடியானது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய 300 கனஅடி தண்ணீரை அப்படியே விவசாயத்திற்காக திறந்து விடப்படுகிறது. இதனால் பாப்பான்கால்வாய் மற்றும் சீவலன்கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை, கடந்த அக்.30ம் தேதி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. பிசான பருவத்திற்கு அணையில் இருந்து நவ.26ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 81.25 அடியானது. விநாடிக்கு 50 கனஅடி நீர் விவசாயம் மற்றும் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது. இந்தாண்டில் 2வது முறையாக ராமநதி அணை நிரம்புவது குறிப்பிடத்தக்கது.

Tags : Karupanadi ,Ramanadi Dam ,
× RELATED ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியது!