×

எஸ்எம்ஏ நேஷனல் பள்ளியில் முதல் மரியாதை நிகழ்ச்சி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நெல்லை, டிச.1: பாவூர்சத்திரம்  அருகேயுள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி  நர்சரி மாணவர்களுக்கு முதல் மரியாதை தெரிந்து கொள்ளுதல் நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.  சிபிஎஸ்இ பள்ளி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். பணியாளர் ஈடுபட்டுள்ள வேலையின் தன்மையை வைத்து  மரியாதை வழங்கக்கூடாது. அனைத்து பணியில் இருப்பவர்களுக்கும் சமமான மரியாதை  வழங்க வேண்டும். செய்யும் தொழில், பணியை வைத்து வேறுபடுத்தி பார்க்கக்  கூடாது. எந்த இடத்தில் எத்தகைய பணியில் இருப்பவர்களை பார்த்தாலும் மரியாதை  கலந்த அன்புடன் பழக வேண்டும் என்ற சமூக சமதர்மம் பற்றிய தகவல்  குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது சமூக நலப்பணிகளும், சமதர்மமும்  சமூகத்தில் மலரும் என விளக்கப்பட்டது.

மாணவிகள் ஜேஸ்மீரா, நிதர்ஷா,  பெர்னிஷா ஆகியோர் ஆசிரியராகவும், அபிவர்ஷினி ராணுவ வீரராகவும்,  மாணவர்கள் ஜெர்வின், ஜெய் ஹர்ஷித், இஷாந்த், சுமித் டாக்டர்களாகவும்,  கிருஷ்வந்த், அருண்மொழி, ரகுவசந்த், ஷிவானி, ஜெனிஷா, நேகா ஆகியோர்  விவசாயிகள் போன்று ஆடையணிந்து தங்களின் பணிகளின் தன்மைகள் குறித்து பேசினர். அனைவருக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகாடமிக் அட்வைசர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள்  செய்திருந்தனர்.

Tags : SMA National School ,
× RELATED எஸ்எம்ஏ நேஷனல் பள்ளியில் தேசிய குழந்தைகள் தின விழா