×

வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தக கண்காட்சி

நாகர்கோவில், டிச.1: நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தக கண்காட்சி 2 நாட்கள் நடந்தது.  பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் புத்தக கண்காட்சியை ஆரம்பித்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.  இதில் குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், பட அகராதிகள், வரலாற்று சுவடுகள், அரசியல் சார்ந்த புத்தகங்கள், பொதுஅறிவு, ஆன்மிகம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள்,பல்சுவை புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

5000க்கும் அதிகமான புத்தகங்களுடன் டிவிடிக்களும், குறுந்தகடுகளும் இடம்பெற்றன. இதில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினர்.
வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் கூறுகையில், புத்தகம் வாசிப்பதன் மூலம் இளம் வயதிலேயே நல்ல தகவல்களை அறிந்து கொண்டு தன்னை செம்மைப்படுத்தி செதுக்க முடியும்.  அதனை மாணவர்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றார். கண்காட்சி ஏற்பாடுகளை முதல்வர் லதா, கல்வி மேற்பார்வையாளர் மற்றும் ஆலோசகர் ரீட்டாபால், நிர்வாக அதிகாரி டெல்பின், புத்தக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags : Book Fair ,Vince CBSE School ,
× RELATED சிறப்பு புத்தக கண்காட்சி