×

நெல் வயலில் தண்டு துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

திருவையாறு.டிச.1: திருவையாறில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சித்திட்டத்தின் கீழ் கிராமத்தில் தங்கி விவசாயம் சம்மந்தமான பயிற்சிகாக தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் 10 போ் திருவையாறு அடுத்த கண்டியூரில் ஒரு விவசாய நாற்றங்காலில் இறங்கி நெற்பயிரை அதிகமாக தாக்கும் தண்டுதுளைப்பான் பூச்சி எங்கிருந்து வருகிறது. முட்டையாகி எப்படி உற்பத்தி ஆகிறது, அது பயிர்களை எப்படி சேதப்படுத்தி விளைச்சல் முழுவதையும் அழித்து விடுகிறது.

தண்டு துளைப்பான் பூச்சி முட்டையிலிருந்து தண்டுதுளைப்பான புழு வெளியே வரும்போது நெல்லின் தண்டை துளைத்து உள்ளே சென்று தின்றுவிடும். அது முதிர்ச்சி அடைந்து தாய் அந்துபூச்சியாக வெளிவிரும், நெல்லின் தூர்விடும் தன்மை குறைத்து, விளைச்சலை பாதிக்கும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த விவசாயிகள் அனைவரும் விதை நோ்த்தி செய்யவேண்டும். நாற்று பறிக்கும்போது நாற்றின் நுனியில் தண்டு துளைப்பான் முட்டைகள் இருக்கும் அதை கிள்ளி எறிந்துவிடவேண்டும். இவ்வாறு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்று வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

Tags :
× RELATED திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்