×

பணி நிரந்தரம் செய்யக்கோரி வவுச்சர் ஊழியர்கள் குடிநீர்தொட்டியில் ஏறி போராட்டம்

காரைக்கால், டிச.1: காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றுகின்ற 1,311 வவுச்சர் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற 16 நாட்கள் வேலையை , 30 நாட்களாக உயர்த்திட ஆவணம் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசின் சட்ட கூலி நாள் ஒன்றுக்கு ரூ.648 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதுவை, காரைக்கால், ஏனாம் உள்ளடக்கிய 1,311 நபர்களையும் சீனியாரிட்டி வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியர்களாக வருகிற டிசம்பர் மாதம் முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் பிரதிநிதிகள் (வவுச்சர் ஊழியர்கள் ) காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் கடந்த 20ம்தேதி முதல் 2 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், வவுச்சர் ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக  முடிவு ஏற்பட்டதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். பின்னர் காரைக்கால் திரும்பிய ஊழியர்கள் நேற்று பணிக்கு சென்றபோது இன்னும் முறையான ஒப்புதல் வராமல் உள்ளதாகவும் இதன் காரணமாக பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் காரைக்கால்- திருநள்ளாறு ரோடு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் அருகில் இருக்கும் குடிநீர் விநியோக தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் அசனா ஆகியோர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Voucher employees ,
× RELATED வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் போராட்டம்